fbpx

“நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது” மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தும் பேச்சு..! அண்ணாமலை கடும் கண்டனம்..!

தமிழகத்தில் நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று(ஜூலை 3ஆம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை.

சாதிவாரி ஒதுக்கீட்டினால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆனார்கள். எங்கள் பட்டப்படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை. எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்று ஆர்.எஸ் பாரதி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலையின் பதிவில், “எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள். முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் திரு. ஆர்.எஸ்.பாரதி.

தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார். திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான். தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திரு.ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

English Summary

“Even a dog gets a BA degree” is a speech that insults the student community..! Annamalai strongly condemned..!

Kathir

Next Post

தூள்..! வருகிறது "ஸ்டார் 3.0" திட்டம்... இனி நீங்க ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்...!

Thu Jul 4 , 2024
"STAR 3.0" scheme is coming... You don't have to go to the register office anymore

You May Like