இன்று நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12-ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வரலாம்.
நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது. இதற்கான தேர்வு இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடக்க உள்ளது. நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மைய நுழைவு பகுதியில் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம். மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை படித்தேன் எனவும்; தனக்கு கடந்த 14 நாட்களாக இருமல், மூச்சு இரைப்பு, தொண்டை வலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இல்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். நுழைவு சீட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி. மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மாணவர்கள் 50 மில்லி லிட்டர் சானிடைசரை உடன் எடுத்து வர வேண்டும். மாணவர்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும். அவை அசல் அடையாள அட்டையாக இருத்தல் வேண்டும். பான் கார்டு , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12-ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வரலாம். தேர்வர்கள் ஆடை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முழுக்கை சட்டை போன்றவை அணிந்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவதற்கு முன்பாக எந்தவொரு மாணவரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. மாணவர்கள் தேர்வு முடிந்த பின்னர் ஒரே நேரத்தில் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.