fbpx

எல்லோரும் ஊருக்கு போக ரெடி ஆகுங்க…! தமிழகத்தில் நவ.11,12,13 என 3 நாட்கள் தொடர் விடுமுறை…! 18ஆம் தேதி ட்விஸ்ட் இருக்கு…

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது, இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் தீபாவளி மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அனைவரின் கோரிக்கையும் ஏற்று தீபாவளி மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக ராசு வெளியிட்ட அறிவிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.

அதன்படி திங்கட்கிழமை விடுமுறை என்பதால், நவம்பர் 11 சனிக்கிழமை, நவம்பர் 12 தீபாவளி (ஞாயிற்றுக்கிழமை), நவம்பர் 13 திங்கட்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Kathir

Next Post

வெயிட் லாஸ்க்கு பெஸ்ட், இத மட்டும் ட்ரை பண்ணுங்க… காலையில் பூசணிக்காய் எடுத்துக்கிட்டா இவ்ளோ நன்மைகளா?

Mon Nov 6 , 2023
மஞ்சள் பூசணி ஒரு நீர் காய்..சாம்பல் பூசணி, அரசாணிக்காய், பரங்கிக்காய், சிவப்பு பூசணி என இதற்கு பல பெயர்கள் உண்டு. இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் எண்ண முடியாத பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இந்த பூசணிக்காயில் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை எப்போது எப்படி சாப்பிட […]

You May Like