Ration: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் பலரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 13) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா அறிவித்துள்ளார்.
அதில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை, விருப்ப இடமாறுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இன்று (மார்ச் 13) ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.