வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பாக பல குழப்பங்கள் நிலவிய நிலையில், புதிய ஜிஎஸ்டி விதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வாடகை மீதான புதிய ஜிஎஸ்டி விதி ஜூலை 18 முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது.. இந்நிலையில் இந்திய பத்திரிகை தகவல் பணியகமான பிஐடி இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. பிஐபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதில் “ வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்படும் போது மட்டுமே குடியிருப்புகளின் வாடகைக்கு வரி விதிக்கப்படும். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தனியாருக்கு வாடகைக்கு விடப்படும் போது GST வரி விதிக்கப்படாது..
நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் GST வரி விதிக்கப்படாது.. எனவே வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்பது தவறான தகவல்..” என்று தெரிவித்துள்ளது..
எனினும் இதுகுறித்து பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம்.. அந்த செய்திகளில் இருக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று பிஐபி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம் மற்றும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலை https://pib.gov.in என்ற இணையதளத்திலும் சரிபார்க்கலாம்..