ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் . இவர் டிடிசி என்ற கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் வந்ததாகவும் அவரிடம் காட்டிய போது பார்சல் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்கேன் செய்தபோது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கிண்டி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து பார்சலை பிரித்தனர் . அதில் 100 ரூ. , 200 ரூ. நோட்டுக்கள் கள்ள நோட்டுகள் இருந்தது.
கொரியரில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சதீஸ் என்பவர் பற்றி தெரியவந்தது. அவரை வேளச்சேரி காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த சுஜித் என்பவரிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பின்னர் 1000 ரூ கொடுத்தால் 5,000 ரூ கள்ள நோட்டு தருவதாக கூறியுள்ளார். நல்ல நோட்டுகள் அனுப்பியதும் கள்ள நோட்டுக்களை தனியார் கொரியர் மூலம் ஐதராபத்தில் இருந்து அனுப்பியது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் வேறு யார் இதில் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என விசாரணை செய்து வருகின்றனர்.