தமிழகத்தில், ரேஷன் கடை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகை காலங்களில், இந்த ரேஷன் கடையின் மூலமாக, பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதுண்டு.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், இன்னும் சிறிது காலத்தில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதோடு மட்டுமல்லாமல், தற்போது ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது கைவிரல் ரேகைகளை பதிவு செய்து, ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக, தற்போது கருவிழிகளை பதிவு செய்து அதன் மூலமாக பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வெளியாகி உள்ளன.
இந்த கைவிரல் ரேகை பதிவு மற்றும் கருவிழிகளின் பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் கருவியை தயாரிப்பதற்கான டெண்டர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், தற்போது இதற்கான டெண்டர் மீண்டும் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, மிக விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரலாம் என்று தெரிகிறது.