தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக ரேஷன் அட்டையில் இருந்து குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தால், அதனை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
* முதலில் nfsa.gov.in/Default.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ரேஷன் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
* அதில் ‘Ration Card Details On State Portals’ என்ற என்பதை தேர்வு செய்து உங்களது மாநிலம், மாவட்டம், தொகுதியின் பெயர் மற்றும் பஞ்சாயத்து ஆகியவற்றை தேர்வு செய்து ரேஷன் கடையின் பெயர் மற்றும் ரேஷன் கார்டு வகை ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
* அடுத்ததாக ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப நபர்களின் பெயர் பட்டியல் இருக்கும்.
* இந்த பட்டியலில் இல்லாத பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.
* நீங்கள் தகுந்த அரசு அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு உங்களது பெயரை மீண்டும் ரேஷன் கார்டில் இணைத்துக் கொள்ளலாம்.