கன்னட திரைப்பட உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தால் பேசுபொருளாகியுள்ளார்.
கன்னட திரைப்பட உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதி, தமிழில் அறியான், நிமிர்ந்து நில், கிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், தமிழ்த் திரையுலகில் பெரிய அளவிலான பிரபலமடைக்கவில்லை. இருப்பினும், தென்னிந்திய மொழிகளில் அவருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள ராகிணியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அவர் போதைப்பொருள் விவகாரத்தில் ஈடுபட்டிருந்ததும் மற்றும் அந்தப் பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராகிணி 140 நாட்கள் சிறையில் இருந்தபின் பிணையில் விடுதலையானார்.
சமீபத்தில், பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ராகிணி கலந்து கொண்டபோது, ரசிகர்கள் அவரை சுற்றி புகைப்படம் எடுக்கவும் ஆட்டோகிராஃப் பெறவும் ஆர்வம் காட்டினர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஒருவர் ராகிணியின் கையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த ராகிணி, அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Video Link: https://www.facebook.com/reel/1292003455206638