fbpx

திருமணம் செய்வதாக கூறி மோசம் செய்த பிரபல துணை நடிகர் சுகுமார்..!! போலீசில் பரபரப்பு புகாரளித்த நடிகை..!!

பிரபல துணை நடிகர் சுகுமார் மீது சென்னை நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை சேர்ந்த நடிகை ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் நிலையில், தன்னை நடிகர் சுகுமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் நடிகை கூறியதாவது, அவருக்கும் காதல் படத்தில் நடித்த துணை நடிகர் சுகுமாருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், நடிகையிடம் இருந்து நகையும் பணமும் சுகுமார் வாங்கி வந்துள்ளார். சமீப காலமாக நடிகையுடனான தொடர்பை சுகுமார் தவிர்த்து வந்த நிலையில், நடிகையின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளார். இதுகுறித்து, சுகுமாரிடம் நடிகை கேட்டபோது, தனக்கு திருமணமாகி விட்டதாக சுகுமார் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுகுமார் திருமணம் ஆனதை மறைத்து தன்னிடம் பொய்யாகப் பழகியதுடன், பண மோசடி செய்ததாக, அவர் மீது காவல் நிலையத்தில் நடிகை புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சுகுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், காதல் படத்தின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! செவிலியர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

கிரிக்கெட் தான் என் முதல் காதல்.. உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர்..!!

Fri Jan 10 , 2025
'Fast bowling has been my first love': India pacer Varun Aaron announces retirement from cricket

You May Like