fbpx

#BREAKING : பிரபல தமிழக வீரர், ஓய்வு அறிவிப்பு.!

இந்திய மற்றும் தமிழக ரஞ்சி அணியின் துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் இவர் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக பங்கேற்றார்.

அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுவரை இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளிலும் 17 ஒரு நாள் போட்டி மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் முரளி விஜய் நாலாயிரத்திற்கும் அதிகமான ரன்களை சேர்த்திருக்கிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3982 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும்.

இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் முரளி விஜய் 2619 ரன்களை பெற்றிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் இவர் ஆடியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஆகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு பற்றி குறிப்பிட்டுள்ள அவர் “இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும்” என்று தெரிவித்தார். மேலும் தனக்கு வாய்ப்பு வழங்கி ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.

Rupa

Next Post

சத்தான, சுவையான குட்டீஸ் ரெசிபி.! தேங்காய் போளி ... ஈஸியா செஞ்சு பாருங்க.!

Tue Jan 31 , 2023
தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப்துருவிய வெல்லம் – 1 கப்ஏலக்காய் தூள் – 1 / 2 டீ ஸ்பூன்உப்பு – 1 /4 டீ ஸ்பூன்மஞ்சள் – 1 /4 டீ ஸ்பூன்நெய் – 4 டீ ஸ்பூன் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு மஞ்சள் சேர்த்து தண்ணீர் தெளித்து விட்டு இலகுவாக மாவு பிசைந்து 3 ஸ்பூன் நெய் தடவி […]

You May Like