புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளர் கே.ராமலட்சுமி நேற்று முன் தினம் காலமானார்.. அவருக்கு வயது 92..
பிரபல தெலுங்கு பாடலாசிரியரான ஆருத்ராவின் மனைவியான கே. ராமலட்சுமி, வயது மூப்பு தொடர்பான உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அவர் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.. அவருக்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி இலக்கியவாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளராக இருந்த ராமலட்சுமி, தனது தனது முதல் நாவலை 1951-ல் வெளியிட்டார்.. மேலும் அவதாலி காட்டு, மெருப்பு தீகா, மனனி காயம், ஆணிமுத்யம், பெல்லி உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதினார்.
ராமலக்ஷ்மி டிசம்பர் 31, 1930 இல் காக்கிநாடாவிலுள்ள கொடநந்துருவில் பிறந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு தெலுங்கில் வெளியான ஸ்வதந்த்ரா என்ற இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவரது சில இலக்கியப் படைப்புகள் “ராமலக்ஷ்மி ஆருத்ரா” என்ற புனைப்பெயரில் வெளியிடப்பட்டன. அவர் 1954 இல் சக எழுத்தாளரும் பாடலாசிரியருமான ஆருத்ராவை மணந்தார்.
ராமலட்சுமி ஒரு எழுத்தாளராகவும், பெண்களின் உரிமைகளுக்காக போராடும் வக்கீலாகவும் பிரபலமடைந்தார். திரைப்படங்கள் தொடர்பான தனது கருத்துக்களை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்பதை திரைப்பட ஆர்வலர்கள் பாராட்டினர். தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களின் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பகிரங்கமாக விவாதித்தார்.. தன் மனதில் உள்ளதை நேரடியாக பேசுவதில் பெயர் பெற்ற இவர், பல்வேறு மகளிர் நல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..