fbpx

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி! ; விண்ணப்பங்களை கோரும் BCCI

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ திறந்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ராகுல் டிராவிட் விருப்பப்பட்டால் அவரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இதற்கான கடைசி தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முக்கியமான தகுதிகள் குறித்து தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விரும்பக் கூடியவர்கள் 60 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு அடுத்து 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் கட்டாயம் விளையாடியிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கக்கூடியவர் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் நாட்டைச் சேர்ந்தவராகவும், அந்த நாட்டிற்காக குறைந்தது இரண்டு வருடங்களாவது விளையாடி இருப்பவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட நபர் ஏற்கனவே அசோசியேட் கிரிக்கெட் நாடு அல்லது ஐபிஎல் தொடர் அல்லது வேறு ஏதாவது டி20 லீக்குகள், இல்லை உள்நாட்டு கிரிக்கெட்டில் பயிற்சியாளராக மூன்று வருடங்கள் இருந்திருக்க வேண்டும். பிசிசிஐ லெவல் 3 சான்றிதழுக்கு இணையான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More ; உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்கான புதிய விதிகளை அறிமுகம் செய்தது BCCI..!

Next Post

விராட் கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ பயன்படுத்தும் 'Whoop' ஸ்மார்ட் பேண்ட்.!! இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

Tue May 14 , 2024
Whoop: விளையாட்டு உலகில் ப்ரொபஷனல் விளையாட்டு வீரர்கள் தங்களது தரத்தினை மேம்படுத்துவதற்கும் தங்களுக்கென்று ஒரு பிட்னஸ் லெவலை உருவாக்கவும் புதிய ஒலிகளை தேடுகிறார்கள். எலைட் லைப் ஸ்டைல் வாழும் மக்களிடையே ‘Whoop’ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஹூப் என்றால் என்ன.? மற்றும் விராட் கோலி கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற வீரர்கள் இதனை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். Whoop பேண்ட் என்பது சராசரி […]

You May Like