சேலம் மாவட்ட விவசாயிகள் அனுமதி பெற்று ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரிகளிலிருந்து விவசாயிகள் விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊராட் சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் சேலம் வட்டத்தில் 9 ஏரிகளும், சேலம் தெற்கு வட்டத்தில் 2, வாழப்பாடி வட்டத்தில் 3, மேட்டூர் வட்டத்தில் 8, காடையாம்பட்டி வட்டத்தில் 7, சங்ககிரி வட்டத்தில், எடப்பாடி வட்டத்தில் 5, ஆத்தூர் வட்டத்தில் 6, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 9, தலைவாசல் வட்டத்தில் 5 மற்றும் கெங்கவல்லி வட்டத்தில் 21 ஏரிகள் என மொத்தம் 76 ஏரிகளில் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.
வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் மேற்கண்டவாறு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பித்து, கனிம விதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்று ஏரிகளில் வண்டல் மண் எடுத்து விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.