fbpx

விவசாயிகளே..!! புத்தாண்டுக்கு வெளியான செம குட் நியூஸ்..!! ரூ.2,000 எப்போது தெரியுமா..?

விவசாயிகளுக்கு 13-வது தவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில்ம் 13-வது தவணையானது எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

விவசாயிகளே..!! புத்தாண்டுக்கு வெளியான செம குட் நியூஸ்..!! ரூ.2,000 எப்போது தெரியுமா..?

இந்நிலையில், 13-வது தவணைத்தொகை குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் பிஎம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 26ஆம் தேதி வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மக்களே கவனம்..!! Omicron's XBB.1.5 Variant..!! இந்தியாவில் முதல் வழக்கு..!! எங்கு தெரியுமா..?

Sat Dec 31 , 2022
இந்தியா தனது முதல் Omicron’s XBB.1.5 வழக்கை குஜராத்தில் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் BF.7 என்ற புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாலும் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம், சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை, மருத்துவமனைகளில் மருந்துகளின் இருப்பு ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா தனது […]

You May Like