கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, கவுதம் புத்த நகர் நிர்வாகம் மாவட்டத்தில் 144 தடையை நீட்டித்துள்ளது.
கொரோனா பாதிப்பு மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தொற்றுப்பரவல் அதிகரித்துள்ளது.. இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 14 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.. காவல்துறை ஆணையரகம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் மற்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது..
“கௌதம் புத்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. வரவிருக்கும் திருவிழாக்கள் மற்றும் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, தடை உத்தரவுகளின் கீழ், 01.07.2022 முதல் 31.08.2022 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதிகாரிகள் முன் அனுமதியின்றி எந்தவிதமான போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளனர். அனுமதியின்றி எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…