Mussoorie: உத்தரகண்ட் முசோரி அருகே மாடு மேய்க்க சென்றபோது திடீரென தேனீக்கள் கொட்டியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட மாநிலத்தின், டேராடூன் மாவட்டத்தின் முசோரி அருகே உள்ள துனேட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்லால்(48). இவரது மகன் அபிஷேக்(8). வழக்கம்போல், அருகில் உள்ள தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, திடீரென குளவிகள் தாக்கியுள்ளன. இதையடுத்து அங்குமிங்கு ஓடியும் குளவிகள் தாக்குதலை விடவில்லை. இதனால் குழந்தையின் மேல் படுத்து குளவி தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றார். இருப்பினும் விடாமல் குளவிகள் கொட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, கிராம மக்கள், அவர்களை மீட்டு முசோரியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் பலனிளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: ஷாக்!. இரவோடு இரவாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்!. பாபர் அசாம் அறிவிப்பு!