fbpx

“நான் வந்துட்டேன்” தந்தையின் இறுதிச்சடங்கில் தந்தையே வந்ததால் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை இறந்ததாக நினைத்து மகன்கள் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தபோது தந்தை உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள நெடுமனூர் கிராமத்தைச் சார்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மகன்களுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார் சுப்பிரமணி. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியின் மகன்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்திருக்கின்றனர். இதற்கிடையில் தியாகதுருகம் காட்டுப்பகுதியில் இறந்த முதியவர் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் இறந்த முதியவரின் உடலை அடையாளம் காண்பதற்காக செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனைப் பார்த்த சுப்பிரமணியனின் மகன்கள் தங்களது தந்தை தான் இறந்துவிட்டார் என நினைத்து பிணத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து இறுதிச் சடங்குகளை நடத்த துவங்க இருக்கின்றனர். தந்தை இறந்து விட்டதாக உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அஞ்சலி செலுத்துவதற்காக அனைவரும் இவர்களது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியன் உறவினர் ஒருவர் மாலை வாங்குவதற்காக கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணி இவர் எதிரே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் நீ இறந்து விட்டதாக நினைத்து உனது மகன்கள் இறுதிச்சடங்கிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அந்த நபருடைய தனது கிராமத்திற்கு வந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணி உயிருடன் வருவதை பார்த்த ஊர் மக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் வந்து அழுகிய நிலையில் இருந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்த ஊரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Rupa

Next Post

திருமணமாகி ஒரே மாதத்தில் காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்து கழுத்தை அறுத்த பெண்!. இருவரும் கைது!

Thu Mar 30 , 2023
கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி போகவில்லை. இந்நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி தாட்சாயிணி தனது காதலரான சங்கமங்களம் பகுதியைச் […]

You May Like