கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்துள்ளார். அவருக்கு நோயாளி ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் இது குறித்து அந்த மருத்துவர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார்.
மருத்துவர் அளித்த புகாரில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும், என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார், என்றும் கூறினார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதுபோல பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவமும், தொடர்ச்சியாக சில சம்பவங்களும் கேரளாவில் நடந்து வருகிறது. மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்திலும் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.