தற்போதைய காலகட்டத்தில் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனிலேயே வாங்க ஆரம்பித்துவிட்டோம். இதற்கேற்றால் போல் ஒவ்வொரு ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் அவ்வப்போது இலாபகரமான சலுகைகள் மற்றும் விற்பனைகளை அறிவிக்கின்றன. இந்த வரிசையில் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஆஃபர்களை வழங்கவுள்ள நிலையில், இதன் பட்டியல் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா :
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023இல் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அமேசான் விற்பனையாக இது பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை செப்டம்பர் 22, 2022 அன்று தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடித்தது. இதேபோல், இந்தாண்டும் செப்டம்பர் 22, 2023 வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக போன்கள் மற்றும் பிற எலெக்ட்ரானிக் பொருள்கள் மீது 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படலாம்.
அமேசான் தசரா விற்பனை :
அக்டோபர் 5ஆம் தேதி இந்த விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் பேஷன், லைஃப்ஸ்டைல் பொருள்கள் மற்றும் மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பிரபலமான கேஜெட்டுகளுக்கு 70% வரை தள்ளுபடியுடன் தொடங்கவுள்ளது. கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் இ.எம்.ஐ.-களில் 6,000 விரைவான தள்ளுபடிகள் கிடைக்கும். வாஷிங் மெஷின், ஏசி, டிவி மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சில சிறந்த சலுகைகளுடன் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியும் இது வழங்கும்.
அமேசான் தீபாவளி விற்பனை :
தீபாவளி என்றாலே அனைவரும் புத்தாடைகள் உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்குப் பிறகு இ-காமர்ஸ் தளத்தில் அமேசான் தீபாவளி விற்பனை மிகப்பெரிய விற்பனையாக இருக்கும். இது அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 10% வரை கூடுதல் வங்கி சலுகைகளை Amazon நீட்டிக்கும்.
அமேசான் ப்ளாக் ப்ரைடே (Black Friday) விற்பனை :
நவம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை அமேசானில் அதிரடி சலுகை விற்பனை நடைபெறும். இதில் இந்தியாவில் மின்னணு பொருட்கள், ஃபேஷன், பாகங்கள், வீட்டு அலங்காரங்கள் போன்றவற்றைத் தவிர பரந்த அளவிலான தயாரிப்புகளில் விற்பனையை வழங்க வாய்ப்புள்ளது.
அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை :
கிறிஸ்மஸ் விற்பனையின் போது ஹீட்டர்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வழங்கப்படும். இது டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தயாரிப்பு வகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் ஆண்டு இறுதி விற்பனை :
ஈ-காமர்ஸ் தளங்களில் கிளியரன்ஸ் சேல் அதாவது இறுதி விற்பனை என்பது மிகப்பெரிய தள்ளுபடியுடன் எப்பொழுதும் வழங்கப்படும். ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சிறந்த சலுகைகளையும், பெரும் தள்ளுபடியையும் எதிர்ப்பார்க்கலாம். இந்த அதிரடி சலுகை விற்பனை வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கிடைக்கும்.