fbpx

முதல் ஜல்லிக்கட்டு..!! ஏசி வேனில் அழைத்துவரப்பட்ட விஜயபாஸ்கரின் காளைகள்..!! வெற்றியா? தோல்வியா?

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள், ஏசி வாகனத்தில் அழைத்து வரப்பட்டது.

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் முழங்க அப்பகுதியில் உள்ள கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின்னர், அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 800 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அமைந்துள்ளது.

முதல் ஜல்லிக்கட்டு..!! ஏசி வேனில் அழைத்துவரப்பட்ட விஜயபாஸ்கரின் காளைகள்..!! வெற்றியா? தோல்வியா?

இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவருக்கும் அவரது காளைக்கும் வெடி வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயபாஸ்கர் காளைகள் பிரத்யேக ஏசி வாகனத்தில் அழைத்து வரப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் பங்கேற்றார். இந்த போட்டியில் களமிறங்கிய கொம்பன் உள்ளிட்ட விஜயபாஸ்கரின் இரண்டு காளைகளையும் யாரும் அடக்க முடியாததால், காளைகளே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Chella

Next Post

கேரளாவில் தொடரும் ஃபுட் பாய்சன் பிரச்னை : சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிப்பு

Sun Jan 8 , 2023
கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பிபின் என்பவர், கடந்த புத்தாண்டு தினத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கேமல் ரெஸ்டோ நிறுவனத்திடமிருந்து மூன்று ஷவர்மாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த ஏழு வயது குழந்தை […]
உணவு பிரியர்களே உஷார்..!! நாய் தின்ற சவர்மாவை விற்பனை செய்த ஓட்டல்..!! வீடியோ வைரலானதால் சீல்..!!

You May Like