முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி காந்த் இணைத்துள்ள படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சனுடன் கூட்டணி வைத்தார் சூப்பர் ஸ்டார். கோலமாவு கோகிலா டாக்டர் என தொடர்ந்து இரண்டு படங்களையும் சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சனுக்கு, தளபதி விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் மிகப்பெரும் தோல்வியை கொடுத்தது. அந்த படத்தின் தோல்வியால் ஜெயிலர் படத்திற்கு இயக்குனர் மாற்றப்படலாம் என்று அப்போது செய்திகள் வெளிவந்தன. அதனை தாண்டி தற்போது ஜெயிலர் பான் இந்தியா படமாக உருவாகி, வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி என பலரும் நடித்துள்ளனர். இன்னும் படம் திரைக்கு வர ஒரு மாதம் காலமே உள்ளதால் ப்ரோமோஷனல் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. அதன்படி நெல்சன் ஸ்டைலில் பர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோ இன்று மாலை 6மணிக்கு வெளியாகும் என்று நேற்றைய தினம் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் தொழில்நுட்பக்க கோளாறு காரணமாக 7மணிக்கு ரிலீஸ் ஆனது பர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோ.
எப்போதும் போல நெல்சனின் யுமர் “ஒரே போராட்டமா இருக்குது” என வசனம் அடுத்த ஒன்றரை மாதம் இவன்கூடவா என அனிருத்தும் புலம்ப, 6ஆம் தேதி பர்ஸ்ட் சிங்கள் வெளியாகும் என அறிவிப்பு என்று அதகள படுத்தியுள்ளார் நெல்சன். இறுதியில் 6ஆம் தேதி மட்டும் பாட்டு வரல 600பேர கூட்டிக்கொண்டு வந்து அடிப்பேன் என்று வசனத்துடன் முடிவடைகிறது பர்ஸ்ட் சிங்கள் ப்ரோமோ