கேரள மாநிலம் திருச்சூரில் கடல் பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கியதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அள்ளிச் சென்றனர்.
அரபிக் கடலில்திடீர் கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சூர் அருகே வாடனப்பள்ளி , பொக்கான்சேரி கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு மீன்கள் ஒதுங்குகின்றது. குவியல் குவியலாக வந்த மீன்களை பார்த்த மக்கள் ஏராளமானோர் வந்து கூடை கூடையாக அள்ளிச் சென்றனர்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தாங்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை குவித்தனர். கூடைகள் வைத்திருந்தவர்கள் கூடை, கூடையாக அள்ளிச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.
மீனவர் கூறுகையில் , குளிர்ந்த கால நிலை ஏற்படும் போது சிறிய மீன்கள் கரைக்கு வரும் . அப்போது அலை வந்து கரைக்கு வீசுகின்றது. இது சிறிது நேரத்திற்கு இப்படி இருக்கும் என தெரிவித்தார்.