புற்றுநோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. புற்று நோய் என்பது உடலில் உள்ள சாதாரண செல்கதான். ஆனால் அந்த செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் போது தான், அது புற்று நோயாக மாறுகிறது. ஒரு கட்டியாக ஆரம்பித்து பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவி விடுகிறது.
புற்றுநோய் வந்த பிறகு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானவர்கள் அநேகர். ஆனால் அந்த சிகிச்சையின் காலம் மிகவும் கொடூரமாக இருக்கும். இதனால் நோய் பாதித்த பிறகு மருந்து மாத்திரைகள எடுத்து நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக, வருவதற்கு முன்பாக நம் உணவு மூலமாகவே புற்றுநோய் செல்கள் வராமல் தடுப்பது நல்லது.
இது குறித்து விஞ்ஞானி ராமலிங்கம் அவர்கள், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” நம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள் கூட புற்றுநோய் செல்களை வளராமல் தடுத்து விடும். குறிப்பாக குதிரைவள்ளி, கம்பு போன்ற உணவு வகைகள் புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவும்.
புற்றுநோய் செல்களை கொல்லக்கூடிய தன்மை ஆலிவ் எண்ணெய்யில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 வகையான பழங்களை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சீதா மற்றும் பப்பாளி பழங்கள் கேன்சர் செல்களை முழுமையாக அளிக்கும் தன்மை கொண்டது. இதனால் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.
விதைகள் இருக்ககூடிய கருப்பு திரட்சைகள், உலர் திராட்சைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும். இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் வெள்ளை மிளகு, கேன்சர் செல்களை உற்பத்தி செய்யும் நொதிகளை அழிக்கும். மேலும், தோலுடன் கூடிய வைட்டமின் சி பழங்கள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் மிகவும் நல்லது.
அதே போல், பாதாம், கொய்யா பழம், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, காலிஃபிளவர், பட்டன் காளான், பீன்ஸ், வெங்காயம், வாழைப்பழங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குகள் மற்றும் ஒமேகா 3 எண்ணெய் கொண்ட கடல் மீன் உணவுகள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும்.
Read more: காலையில் எழுந்த உடன் ரொம்ப சோர்வா இருக்கா? எந்த வேலையும் செய்ய முடியவில்லையா? அப்போ இந்த டீ குடிங்க…