10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சரிவர பள்ளிகள் இயங்கவில்லை.. கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.. இதனால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது.. எனினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டது.. மேலும் இந்த ஆண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது..
இதனிடையே 10,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்கவும், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
அதன்படி, 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் காலை அல்லது 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. 1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது..