தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது எல்லோருக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அதோடு 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி போவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்வியை எழுப்பப்பட்டபோது 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.