விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். இதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஈடுபட்டது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்த மணிமேகலை வெளியேறி விட்டார். பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை முன்னதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த விஷயத்தில் பிரியங்காவை தவிர மற்ற எல்லோருமே வாயைத் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் என்னவோ மணிமேகலைக்கு அதிக சப்போர்ட் இருப்பது போல் தெரிந்தது. சாமானிய மக்கள் எல்லாம் மணிமேகலைக்கு ஆதரவாக இருக்க.. பாவனி ரெட்டி, ஷகிலா, அமீர், குரேஷி என விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொருத்தராக பிரியங்காவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இதற்கு இதுவரை விளக்கம் கொடுக்காமல் இருந்த பிரியங்கா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. அதில் அவர் “பேக் டு தி கிரைண்ட்” என்ற கேப்ஷனோடு கடற்கரையில் அவர் ஜாலியாக அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மணி மேகலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக என்ன வேணா நடக்கட்டும்.. நா சந்தோசமா இருப்பேன்.. என்று இவர் சொல்லாமல் சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Read more ; பகீர்.. பள்ளியின் மாந்திரீக சடங்குக்காக 2 ஆம் வகுப்பு சிறுவன் படுகொலை..!! – விசாரணையில் திடுக்கிடும் தகவல்..