முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது..
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. கோவை வடவள்ளி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.. ஐ.டி சோதனைக்குள்ளாகி உள்ள சந்திரசேகர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஆவர்.. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருக்கிறார்..
ஏற்கனவே எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, சந்திரசேகரின் வீட்டிலும் 2 முறை சோதனை நடைபெற்றுள்ளது.. இந்நிலையில் இன்று மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.. சந்திரசேகரின் வீடு, தோட்டம், அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..