ஆன்லைனில் பணம் செலுத்துவது பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என்றால், மறுபுறம், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய ஆன்லைன் மோசடி நடைபெற்று வருகிறது.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்வாரியத்தில் பேசுவதாக கூறும் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடிகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன… உங்கள் வீட்டின் மின்கட்டணம் கடந்த மாதம் அப்டேட் செய்யப்படவில்லை.. எனவே மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு லிங்கை மோசடி கும்பல் அனுப்புகிறது.. இல்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்..
இதனை உண்மை என நம்பி பலர் அந்த லிங்கை திறந்து வங்கி விவரங்களை பதிவிடுகின்றனர்.. ஆனால் அடுத்த நிமிடமே வங்கிக்கணக்கில் இருந்த மொத்த பணமும் மோசடி கும்பலால் திருடப்படுகிறது… அதன்பிறகே பணத்தை இழந்தது குறித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தெரியவருகிறது..
எனவே மின் கட்டணம் செலுத்தக் கோரி வரும் போலி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது… உண்மையில் மின் வாரியத்தில் இருந்து இதுபோன்ற குறுஞ்செய்திகளோ அல்லது செல்போன் அழைப்புகளோ வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே மோசடி கும்பலிடம் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..