fbpx

23-ம் தேதி இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…! ஆட்சியர் அறிவிப்பு….!

23-ம் தேதி இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 23.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ. ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 23.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழ்நாட்டில் புதிதாக உதயமாகும் 5 மாவட்டங்கள் இவைதான்..!! அடடே இந்த ஊரும் மாவட்டமாகிறதா..?

Sat Jan 20 , 2024
தமிழ்நாட்டில் தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் 5 புதிய மாவட்டங்கள் இந்தாண்டில் உருவாக உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பால் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை […]

You May Like