fbpx

ச்சை மனுஷனாய்யா நீயெல்லாம்……? சொந்த மனைவியை 10 வருட காலமாக அடுத்தவர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கணவர் மனைவி எடுத்த அதிரடி முடிவு…..!

பிரான்ஸ் நாட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை பல ஆண்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதோடு, இந்த கொடூரமான செயல் கடந்த 10 வருட காலமாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 26 முதல் 73 வயது வரையில் உள்ள 51 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பலரையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் லாரி ஓட்டுநர், தீயணைப்பு வீரர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், செவிலியர், பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டொமினிக் பி நாள்தோறும் இரவில் மனைவியின் உணவில் லோராசெபம் என்ற மருந்தை கலந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மனைவி சாப்பிட்டுவிட்டு உறங்கும்போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ய வெவ்வேறு நபர்களை வரவழைத்து இருக்கிறார். அந்த நபர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வதை டொமினிக் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார் இந்த வீடியோக்களை ஒரு பென்டிரைவில் அப்யூஸஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக சேமித்து வைத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்தேறி உள்ளனர். பெரும்பாலான ஆண்கள் பலமுறை இந்த குற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டொமினிக்குக்கு திருமணம் ஆகி 50 வருடங்களுக்கு மேல் ஆகிறது, அவர்களுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றன.

மயக்க நிலையில் இருக்கும் மனைவி விழித்து விடாமல் இருப்பதற்காக புகையிலை, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் அக்கம், பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக வாகனங்களை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு மறைவாக வீட்டிற்குள் வர வேண்டும் எனவும் அழைத்து வந்தவர்களுக்கு பல கண்டிஷன்களையும் போட்டு இருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அவருடைய மனைவிக்கு சம்மதம் இல்லை என்று எங்களுக்கு தெரியாது எனவும், காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர் சிலர் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020ம் வருடம் இந்த விவகாரம் காவல் துறையினருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு தான் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கும் தெரியவந்துள்ளது. கணவரின் செயல் தொடர்பாக தெரிய வந்ததை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.

Next Post

சென்னையில் விபச்சாரமா…..? காவல்துறை ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு கதறும் ஆசாமிகள்…..!

Fri Jun 23 , 2023
சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (54) என்பவர் 2️ பெண்களை வைத்து பாலி தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. நேற்று அவரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், அந்த 2 பெண்களையும் இணைத்து அரசு […]

You May Like