கோடைக்காலத்தில், வெப்பத்தின் காரணமாக உடல் அடிக்கடி சோர்வடையும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பனை நுங்கு தாகத்தைத் தணித்து உடலை குளிர்விக்கும். நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்தப் பழங்கள், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பேரிச்சம்பழத்தில் புரதம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.
கோடை காலம் தொடங்கிய நிலையில் எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடல் வெப்பத்தை குறைக்கிறது: நுங்கின் இயற்கை சாறு உடலின் உஷ்ணத்தை குறைத்து, குளிர்ச்சி தருகிறது.
நீரிழப்பை தடுக்கிறது: இதில் அதிக அளவு நீர் உள்ளதால் உடல் நீர்ச்சத்தை பாதுகாக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது: நுங்கு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது: நுங்கின் நார்ச்சத்து ஜீரணத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கும்.
சரும சுகாதாரம்: நுங்கில் உள்ள ஈரப்பதம், சருமத்திற்கு இயற்கை மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக உதவும்.
உடல் உற்சாகத்தை அதிகரிக்கிறது: நுங்கில் உள்ள எலக்ட்ரோலைட்கள், உடலுக்கு சக்தியூட்டுகின்றன.
பொட்டாசியம் அதிகம்: இதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இயற்கை சிறுநீர் வாயு நிவாரணி: சிறுநீரகம் மற்றும் மூலநிறையம் சுத்தமாக இருக்க நொங்கு உதவும்.
எலும்பு வலிமையை அதிகரிக்கிறது: கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. முழங்கால் வலி மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: நுங்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் அவை பயனுள்ளதாக இருக்கும்.
Read more: போரின் போது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால்.. கதிர்வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி..?