10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சரிவர பள்ளிகள் இயங்கவில்லை.. கனமழை காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.. இதனால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது.. எனினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டது.. மேலும் இந்த ஆண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது..
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதாவது 10,11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்கவும், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
அதன்படி, 10,11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் காலை அல்லது 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. 1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது..