fbpx

கம்பீர்-கோலி மோதல் சர்ச்சை!… எல்லோரும் இவர் மாதிரி ஆகிடுவாங்களா?… தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

கோலி மற்றும் காம்பீர் இடையேயான மோதல் சர்ச்சைகளுக்கு மத்தியில் எப்போதும் எல்லோருக்குமே மதிப்பு கொடுக்க கூடியவர் தோனி என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆனால், லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி ஷு காலை தூக்கி காட்டி தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார் என்று லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் நடுவரிடம் குற்றம் சாட்டினார். இதனால், நடுவர், விராட் கோலியை அழைத்து அறிவுறுத்தினார். இதன் காரணமாக விராட் கோலி ஆத்திரமடைந்தார். அதுமட்டுமின்றி விராட் கோலி ஒவ்வொரு கேட்சாக பிடிக்கும் போது கூட மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அப்போது, கவுதம் காம்பீருக்கு பதிலடி கொடுக்கும்

வகையில் விராட் கோலி சைகை மூலமாக செய்து காட்டினார். அதோடு, போட்டி முடிந்த பிறகும் கூட விராட் கோலி, லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த காம்பீர், மேயர்ஸை பிரச்சனை ஏதும் வேண்டாம் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.இதையடுத்து, விராட் கோலியின் கவனம் முழுவதும் காம்பீர் பக்கமாக திரும்பியது. ஏற்கனவே தன்னை விமர்சனம் செய்ததால் கோபத்தில் இருந்த காம்பீர், கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற வீரர்கள் அனைவரும் சூழ்ந்து மோதலைதடுக்க முற்பட்டனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாத நிலையில், அமித் மிஷ்ரா மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் விராட் கோலியை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில், தான் விராட் கோலி, கவுதம் காம்பீர் மற்றும் நவீன் உல் ஹாக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோலி – கம்பீர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில் தல தோனியை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் தோனிக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. அவர் மற்ற இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் தான் இருந்துள்ளார். இதனால் தான் ரசிகர்கள் தோனி கொண்டாடி வருகின்றனர். அதோடு, எப்போதும் சீனியர் வீரர்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர். அவர் முன்னாள் வீரர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர். இதுவரையில் யாரிடமும், எதற்காகவும் சண்டை போட்டதும் கிடையாது. விராட் கோலி மாதிரியெல்லாம் தோனி கிடையாது என்று ரசிகர்கள் தோனி கொண்டாடி வருகின்றனர்.

Kokila

Next Post

விராட் கோலி - கம்பீர் இடையே தொடரும் மோதல்!… 10 ஆண்டுகளாக பகை!… அப்படி என்ன பிரச்சனையா இருக்கும்?

Wed May 3 , 2023
மைதானத்தில் விராட் கோலி – கம்பீர் இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் 100% அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. எளிய இலக்கை […]

You May Like