fbpx

விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை!. தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Special Buses: தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 6 (வெள்ளிக் கிழமை) முகூர்த்தம், செப்டம்பர் 7 (சனிக்கிழமை) விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 8 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்.5, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் செப். 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 1030 பேருந்துகளும், செப்டம்பர் 8 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.6, செப்.7 அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து செப் 6, 7 அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23 ஆயிரத்து 514 பயணிகளும், சனிக்கிழமை அன்று 6 ஆயிரத்து 961 பயணிகளும், ஞாயிறு அன்று 21 ஆயிரத்து 650 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: ஆசிரியர் தினம் 2024!. அறியாமை இருளை நீக்கி அறிவு தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!

English Summary

Ganesha Chaturthi, continuous holiday!. Special buses are running all over Tamil Nadu from today!

Kokila

Next Post

55 கி.மீ வேகத்தில் காற்று... இன்று வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி...!

Thu Sep 5 , 2024
A low pressure area forming over the Bay of Bengal today
புயலுக்கு நடுவே பூக்களாய் மலர்ந்த 270 குழந்தைகள்..!! மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like