fbpx

#கோவை: ஓரினச் சேர்க்கை ஆப்.. ஆண் செவிலியருக்கு ஏற்பட்ட விபரீதம்..!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 33 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற ஆப் மூலம் ராக்கிக்கு அறிமுகமானார். இதற்கிடையில் இருவரும் நண்பர்களாக இருந்ததால், இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடிவு செய்தனர். 

இதையடுத்து இருவரும் கோவை சரவணம்பட்டியில் நேரில் சந்தித்துவிட்டு துடியலூர் சாலையில் சென்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டனர். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் செவிலியரை மிரட்டி ஒரு பவுன் தங்க நகை, ரூ. 10,000 ரொக்கம் மற்றும் மொபைல் போன். 

இதுகுறித்து ஆண் செவிலியர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸாருக்கு, ராக்கி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பிறகு, ராக்கியிடம் முறைப்படியும் தீவிரமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவர் பெயர் ராக்கி இல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், இவரது நண்பர்கள் நெல்லையைச் சேர்ந்த மாரிசெல்வம், திருச்சியைச் சேர்ந்த அபிராம். கொடைக்கானலைச் சேர்ந்த ஹரிவிஷ்ணுவுடன் சேர்ந்து, ஆண் நர்ஸை திட்டமிட்டு கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கார்த்திகேனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் மாரிசெல்வம், அபிராம், ஹரிவிஷ்ணு ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

#நாமக்கல்: குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவன்..!

Tue Jan 3 , 2023
நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே […]

You May Like