fbpx

ரேஷன் அட்டையில் பிரச்சினையா…? வரும் 18-ம் தேதி நடக்கும் சிறப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 18.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு. காஞ்சிபுரம் வட்டத்தில் புஞ்சையரசந்தாங்கல், உத்திரமேரூர் வட்டத்தில் காவனூர் புதுச்சேரி, வாலாஜாபாத் வட்டத்தில் தேவரியம்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மேட்டுப்பாளையம், குன்றத்தூர் வட்டத்தில் திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்‌ பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பாக்-அணிக்காக நிறைய பாடுபட்டேன்!… ஆனால்?… பாபர் அசாம் உருக்கம்!

Thu Nov 16 , 2023
கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் பெருமை மற்றும் மரியாதையை நிலைநிறுத்த நிறைய பாடுபட்டேன் என்று கேப்டன் பதவில் இருந்து விலகிய பாபர் அசாம் உருக்கமாக கூறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு […]

You May Like