fbpx

சென்னையில் ரூ.200 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்..!! என்ன பிளான்?

போஷ் மற்றும் சீமென்ஸ் ஆகிய இரு ஜெர்மனி நிறுவனங்களும் சென்னையில் முதலீடு செய்து தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

போஷ் மற்றும் சீமென்ஸ் ஆகிய பிராண்டுகளின் இந்திய உற்பத்தியாளரான பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம், போஷ் வாஷிங் மெஷின்களை இந்தியாவிலேயே தயாரிக்க இரண்டாவது அசெம்பிளி லைனை அமைப்பதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 60% உள்ளூரில் இருந்து தயாரிக்கப்பட பொருட்களை 2025 ஆம் ஆண்டிற்குள் 70%-75% வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

“ஜூலை மாதத்தில் 9 கிலோ மற்றும் 10 கிலோ திறன் கொண்ட போஷ் வாஷிங் மெஷின்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சைஃப் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய டீஸ்வாஷர் சந்தையில் 48% சந்தை பங்கைக் கொண்டுள்ளது பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம். பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனத்திற்கு, இந்தியா முக்கியமான சந்தை ஆகும், மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%-25% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சைஃப் கான் தெரிவித்துள்ளார். பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனத்திற்கு, தென்னிந்தியா மிகப்பெரிய சந்தையாகவும், 48% வர்த்தக பங்கீட்டை கொண்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் முறையே 24% மற்றும் 22% சந்தை பங்கீட்டை கொண்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் புதிய போஷ் பிராண்ட் ஸ்டோரை வியாழக்கிழமை திறந்து வைத்தது இந்த நிறுவனம்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி..!! ‘கண்டிஷன் போட்ட கவுதம் கம்பீர்!’

Next Post

பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும்...!

Sat May 25 , 2024
கால்நடை வளர்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக வெப்பத்தாக்கம் மற்றும் மழையினால் கால்நடைகளுக்கு நோய் தொற்று மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதன் விவரத்தினை உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவர் […]

You May Like