தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில்; அவர்களுக்கு எதிராக எங்களிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. முதல் கட்ட விசாரணையில், இந்த வழக்கில், அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. எனவே, ஆதாரம் கிடைக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.
பெண் கடத்தப்பட்டாரா அல்லது சட்டவிரோதமாக அடைக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பெண் தனது விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஐந்து பேர் தன்னை இரண்டு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். விசாரணையில் அது போலியானது என தெரிய வந்துள்ளது.