fbpx

லிவ்-இன் காதலனை குத்திக்கொன்ற காதலி..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா. இவர், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர்.

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையறிந்த ரேணுகா அவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் சராமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் ஜாவத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தவறை உணர்ந்த ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார். அவரது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை..!! அமலாக்கத்துறை அதிரடி..!!

Tue Sep 12 , 2023
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். கடந்த ஜூன் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 70 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வரும் நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு சென்னை […]

You May Like