fbpx

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37,176-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4,647-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.37,176-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 60 காசு உயர்ந்து ரூ.61.30-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா? வெளியான புதிய தகவல்..!

Mon Jul 18 , 2022
2021-22ஆம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது. 2021 – 2022ஆம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், வருமானவரி தாக்கலை அபராதமின்றி செலுத்த இம்மாதம் 31ஆம் தேதி கடைசி தேதியாக […]

You May Like