ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.45,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,625 விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.76.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500க்கு விற்பனையாகிறது