fbpx

தங்கம் விலை மீண்டும் குறைந்தது… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்குரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 80 காசு குறைந்து ரூ.61.70-க்கு விற்பனையாகிறது… இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,700-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

இன்ஸ்டாகிராமில் கஞ்சா விற்பனை..! கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!

Wed Jul 13 , 2022
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே சென்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, தல்லாகுளம் […]

You May Like