தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்ய பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளின் அத்தியாசிய தேவைகளுக்கும், படிப்பிற்கும், திருமணத்திற்கும் உதவியாக இருக்கும். நிலத்தில் முதலீடு செய்தால் உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலையின் காரணமாக அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (அக்.30) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.49,040-க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,130-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.