தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது.
பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.