fbpx

Gold Rate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! ரூ.65,000-ஐ நெருங்கியது..!! மீள முடியாத அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சென்னையில் மார்ச் 13ஆம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,960-க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.65,000-ஐ நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : மும்மொழியை பற்றி பேசுறீங்களே..!! லண்டன் சென்றபோது எந்த மொழியில் பேசினீங்க..? கொஞ்சம் சொல்றீங்களா..? அண்ணாமலை கேள்வி கேட்கும் செந்தில் பாலாஜி..!!

English Summary

In Chennai today, the price of gold jewelry rose by Rs. 440 per sovereign, selling for Rs. 64,960.

Chella

Next Post

ஒளியை உறைய வைக்கும் விஞ்ஞானிகள்..! திரவம் போல பாயும்.. ஆனால் திடப்பொருள் வடிவத்தில் இருக்கும் ஒரு அரிய பொருள் கண்டுபிடிப்பு..

Thu Mar 13 , 2025
A team of Italian scientists has discovered a way to make light act as a rare material called a "supersolid."

You May Like