fbpx

இப்படியே போனா நகைகள் வாங்குவது எப்படி? நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலை!!! இன்றைய விலை நிலவரம்

இந்த மாதம் தொடங்கிய முதல் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருக்கிறது.இந்த மாதத்தில் விழாக்களும் அதிகம், நகை வாங்க விருப்பம் உள்ளவர்களும் அதிகம், இந்த நிலையில் இவர்களுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.

அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் அபரணத்தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த அக்டோபர் 1ல் ஒரு கிராம் அபரணத்தங்கம் 4690.00 க்கு விற்க்கப்பட்டது தற்போது 150 ரூபாய் அதிகரித்து 4840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் 1 கிராமுக்கு 150 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1200 ரூபாயும் உயர்ந்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் வழக்கம்போல நகை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து வருவதால் வருத்தத்தில் உள்ளனர்.

Kathir

Next Post

'வந்தாச்சு புதிய நம்பர் பிளேட்'..!! இனி வாகனங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்..!!

Thu Oct 6 , 2022
நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய ’பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்’ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக […]

You May Like