அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகப்படுத்தியுள்ளாா். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 34 களப் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் உள்பட 61 பயிா்களில் 109 ரகங்களை பிரதமா் மோடி அறிமுகம் செய்தார்.
அப்போது விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுடன் பிரதமா் கலந்துரையாடினார். மேலும், விளைநிலங்களை பார்வையிடவும் செய்தார். 109 ரகங்களில், களப் பயிா்களில் சிறுதானியங்கள், தீவனப் பயிா்கள், எண்ணெய் வித்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அதேபோல் பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிா்களை பொறுத்தவரை பழங்கள், காய்கறிகள், பூக்கள், சணல், மூலிகைப் பயிா்கள் உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.