தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது. குறிப்பாக, அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த குடும்ப அட்டைகளே முக்கிய பங்காற்றுகின்றன. வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம், பொங்கல் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆகியவை ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பிறகு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “புதிதாக ரேஷன் அட்டை பெற சுமார் 2.40 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்” என்று கூறியுள்ளனர்.
Read More : குடிமகன்களுக்கு குட் நியூஸ்..!! இனி பணம் மிச்சமாகும்..!! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!