fbpx

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! வரும் 24ஆம் தேதி விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

பிப்ரவரி 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான விழா வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, மறுநாள் 19ஆம் தேதி மயானக் கொள்ளையும், 22ஆம் தேதி தீமிதி விழாவும், 24ஆம் தேதி முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

Chella

Next Post

Unforgettable moments….! பிக்பாஸ் ரச்சிதா கலக்கத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்….

Fri Feb 10 , 2023
பிரபல விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் ஆரம்பித்து, நாம் இருவர் நமக்கு இருவர் வரையில் பல நெடுந்தொடர்களில் நடித்தவர் ரச்சிதா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டது அவருடைய புகழை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்சமயம் அவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரை பற்றி பல தகவல்கள் பரவ தொடங்கியது. ராபர்ட் மாஸ்டர் […]

You May Like